ஒய்வு

ஒய்வு

ஒற்றைத் தென்னையில்
இருந்து ஓய்வெடுக்கும்
நோக்கத்தில் வீழ்கின்ற
ஒவ்வொரு
தென்னங்கீற்றையும்
ஓசையின்றி
வேடிக்கை பார்க்கிறது
வேலியோர கதிகால்.
நாளைக்கு
நனைந்து மடங்கி
கிடுகாய் இந்த வேலியில்
தொங்கும் கீற்றுக்கு ஒய்வு ஏது...
உள்ளுக்குள் வேலி சிரிப்பது
கேட்காமலே காற்றில்
சல சலக்கின்றன
ஓலைகள்.

எழுதியவர் : உமை (17-Dec-14, 2:06 am)
Tanglish : oyvu
பார்வை : 82

மேலே