எங்கே எனது செல்லமச்சான்
நித்தம் தித்தம்
அவர் தந்த முத்தம்
நெஞ்சுக்குள்ளே
இன்னும் சத்தம்....
பக்கம் பக்கம்
வந்ததுமே நான்
பட்ட வெட்கம்
நினைவிருக்கு
இன்னும் ஓர் பக்கம்...
கண்ணைக்
கண்ணைக்
சிமிட்டி கையைக்
கொண்டு என் கரம்
பற்றும் போது நான்
கொண்ட அச்சம்
இன்னும் இருக்கு
மிச்சம்............
தாவணி கட்டிய
எனனைக் கண்தாங்கி
கட்ட வைத்த போது
வந்த வெறுப்பு
இன்னும் எரியுது
நெருப்பாக......
மெத்தை போட்டு
வித்தை காட்டிய
அத்தை மகன்....
என்னைஒத்தையாக
விட்டு வேதனையைப்
பரிசாக கொடுத்து
எங்கே போனானோ
என் பக்கி மச்சான்......
சிகரம் போல்
உயர வேண்டும்
உச்சியில் நம்
பணக் கொடி
பறக்கவேண்டும்
என்று புலம்பிய
மச்சான் புலம்
பெயர்ந்து போனாரே.....
புதைல் தேடிப்
போனாரோ
புது மனிதனாக
உழைத்து வரப்
போனாரே என்
செல்ல மச்சானே
நீ சொல்லவேயில்லையே
செல்லம்மா நான்
என்னாம்மா ஏங்குகின்றேன்
வந்து பாருமச்சானே நீ
வாரும் மச்சானே.......
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
