நீலக்குயில் தேசம்14---ப்ரியா

அந்த ஆலயத்தில் ராகேஷ் இருந்த இடத்தை கண்டுபுடித்து வந்து இருக்கைக்கு பின்னால் சென்றனர் தோழிகள் மூவரும்............"ராகேஷ் உன்கிட்ட பேசணும் கொஞ்சம் வெளில வா" என்று சொல்ல இதழ்களை விரித்தாள் கயல்.....
அதற்குள் அவளின் பின்னிருந்து ஒருகுரல்"ஹலோ மிஸ் கயல்விழி உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும் வெளில வாங்க" என்று அழைத்தது........??

திரும்பிய கயலுக்கு வார்த்தைகள் வரவில்லை கண்களில் பயம்தான் இவனா?இவன் எதுக்கு நம்மை அழைக்கிறான்...?

சார்.....என்று அழைத்தாள்........ம்.........உங்களைத்தான் கொஞ்சம் வெளில வாங்க என்று மறுபடியும் அழைத்தான்.
வெளியே அவனை நோக்கி சென்றவள் மறுபடியும் திரும்பி ராகேஷை பார்த்துக்கொண்டாள் அவன் போயிட்டு வா என கண்ணால் சைகை காட்டினான்.....அவளும் சரி என்பது போல் தலையசைத்துவிட்டு சென்றாள்.இவளது தோழிகள் எதுவும் நடக்காதது போல் கண்களை மூடி பிரார்த்தனை பண்ணுவது போல் முட்டிப்போட்டு அமர்ந்து கொண்டனர்........!

வெளியே போனவள் என்ன சார் என்னை எதுக்கு கூப்டீங்க என்று கேட்டாள்?

ம்....நானும் ஒரு மாணவன்தான் உங்களுக்கு அந்த மேடம் விடுப்பிலிருப்பதால்தான் சிறிது நாட்களுக்கு நான் வகுப்பு நடத்தப்போகிறேன் என்று அவன் கூற....தெரியும் சார் என்று பதிலளித்தாள்.

அவன் பொறுமையாகப்பேச இவளோ படபடவென பேசிக்கொண்டிருந்தாள்.

என்னங்க உடனே கிளம்பணுமா அவசரமா இருக்கீங்களா?என்று கேட்டான்.

ஆமா சார் பிரண்ட்ஸ் காத்துட்டிருக்காங்க.......பரவாயில்ல என்ன விஷயம்னு சொல்லுங்க என்றாள் கயல்.

அது வந்து எப்டி சொல்றது என்று இழுத்தான்........" இவன் ஏன் இப்டி வயதுக்கு வந்த பொண்ணுமாதிரி வெட்கப்படுறான்" என மனதிற்குள் நினைத்தவள் வெளியில் சிரித்துவிட்டாள்......!

எதுக்கு சிரிக்கிறீங்க என்று கேட்டான் அது ஒன்றுமில்லை..... சொல்லுங்க சார் இப்டி யோசிக்கிறீங்க என்று அவனை உற்சாகப்படுத்த........உன்ன எனக்கு ரொம்ப புடிச்சிருக்குது கயல்விழி உன்னை காதலிக்கிறேன் எனக்கு ஏற்றவள் நீதான் என உள்மனது சொல்கிறது என்று மனதில் பட்டதை பட்டுன்னு சொல்லிட்டான்.

இப்பொழுது அவளது துறுதுறு பேச்சு நின்று போனது அமைதியை இழந்தாள் கண்கள் ஆச்சர்யமாய் பார்க்க என்ன சார் சொல்றீங்க என்று கண்களில் தீயைக்கக்கினாள்.....தயவு செய்து அப்டி பார்க்காதீங்க கயல்விழி.

உங்கள முதல்தடவை பார்க்கும் போதே அந்த படபட பேச்சு துறுத்துறுபார்வை என அனைத்தும் பிடித்துப்போனது அன்னிக்கு நீங்க பண்ணின காரியத்துக்கு நான் உங்கள பழிவாங்கணும்னுதான் மனசுல நினச்சேன் அப்புறம்தான் இதெல்லாம் தப்பு பாவம் என்று மனதை மாற்றிவிட்டேன் என் மனதில் முழுவதும் உங்களை புகுத்திவிட்டேன் என்று இன்னும் சில காதல் வசனங்களை பாடினான் அவன்..........ஆனால் அவளோ அவன் பேச்சு எதையுமே கண்டுகொள்ளவில்லை.

இப்படி பதில் சொல்லாமல் இருந்தால் என்னம்மா அர்த்தம் என்று தாழ்ந்து கேட்டான்...?

என்னப்பற்றி உங்களுக்கு என்ன சார் தெரியும் என்று பதிலுக்கு இவள் கேட்க?அவனோ பதில் பேசாமல் மௌனமானான்.

எனக்கு இதுல விருப்பமா இல்லங்க...........நான் வேற யாரையாவது காதலிக்கிறேனோ?இல்ல காதலை வெறுப்பவள்னோ? காதல் தோல்வியா இருக்குமோ?பெற்றோர் சொல்ற பையனைத்தான் கட்டிப்பாளோ?இல்ல காதல் சொல்ற உங்கள புடிக்கலன்னோ....?எப்டி வேணும்னாலும் எடுத்துக்கோங்க சார் நான் வரேன்..........என்று அவளையும் மீறி ஆத்திரமாய் பேசிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள் கயல்.

அவன் அவள் போகும் திசையையே வெறித்து நோக்கிக்கொண்டிருந்தான்.

ஆலயத்திற்குள் சென்றவள் ஆவேசமாகவும் டென்சனாகவும் இருப்பதை பார்த்து தோழிகளுக்கும் ராகேஷ்க்கும் ஏதோ ஒன்று நடந்திருக்கிறது என்று புரிந்தது."என்னடி என்ன ஆச்சு ஏன் கோவமா இருக்கா?"என்று தோழிகள் கேட்க....?அப்புறமா சொல்றேன்டி என்றவள் ராகேஷ் பக்கம் வந்து தன் செல்போன் நம்பரை கொடுத்து வீட்டுக்குபோய் கூப்பிடுங்க பேசுறேன் என்று அவன் மீது காதல் பார்வை வீசிவிட்டு நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.....!

கயலின் தோழிகளுக்கோ இவள் சொல்வதற்கு முன்னாலே புரிந்தது அவன் ஏதோ தில்லுமுல்லு பண்ணிருக்கான் என்று.......... ராகேஷ்க்கு அது தெரிந்திருக்கவில்லை இருந்தும் கொஞ்சம் சந்தேகம் வந்தது ஆனால் அவன் எதுவும் கேட்கவில்லை.......

___________________________________________________________________________________________________

அரவிந்த் மறுபடியும் அங்கு ராஜலெட்சுமி மற்றும் அவள் மகள் ப்ரியதர்ஷினியிடம் இங்கு நடந்த விஷயங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் எந்த ஒரு ஒளிவு மறைவுமின்றி சொல்லி முடித்தான் ஆனால் அவளால் இதை நம்பவும் முடியவில்லை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை உண்மையா?பொய்யா?ஒருவேளை இவன் நாடகாமாடுகிறானோ?என்று மனதிற்குள் நினைத்தவள் வெளியே கேட்டும் விட்டாள்........"அது எப்டி சினிமாவுல வேணும்னா அச்சு அசல் 2பேர் ஒரே மாதிரி இருக்கலாம் அதுக்காக இங்க வந்து கதை விடுறீங்களா நாங்க
நம்பமாட்டோம்" என்று சொன்னாள் ப்ரியா............நம்புங்கம்மா நீங்க இருக்கிற இடம் கண்டுபுடிச்சி கயல்விழிக்கிட்ட சொல்லப்போறேன் அப்புறம் அவளே வந்து பார்ப்பா உங்க செல்போன் நம்பர் தாங்க.....இதுதான் கயலின் நம்பர் என்று நம்பர்களை பரிமாறிக்கொண்டனர் இருவரும்.....!

சரி அம்மா, ப்ரியா நான் கிளம்புறேன் அவ பேசுவா......யார்க்கிட்டயும் கயல் மாதிரி நீயும் சண்டைக்கு போகாத பசங்க வம்பிழுக்கிறாங்கன்னு
சொல்லி நீங்களே போய் வம்புல மாட்டிராதீங்க கவனமா இருங்க என்று கயலின் மறு உருவம் போன்ற ப்ரியாவுக்கும் அறிவுரை சொல்லிவிட்டு கிளம்பத்தயாரானான் அரவிந்த்.......சிறிது தூரம் சென்றவன் மறுபடியும் திரும்ப வந்தான் அதைப்பார்த்த ப்ரியா "இன்னும் கெளம்பலியா கிளம்புங்க கிளம்புங்க காத்து வரட்டும்" என்று கயல் பாஷையில் இவனை கலாய்த்தாள் அரவிந்தை ப்ரியாவுக்கும் அண்ணன் என்ற முறையில் மிகவும் பிடித்துப்போனது...........ஐயோ வாலு என்ன பேச விடுடி என்றவன்.....தயக்கமாய் ராஜலெட்சுமியிடம் அம்மா வீட்டுல நீங்களும் ப்ரியதர்ஷினியும் இருக்கீங்க இவங்க அப்பா இல்லியா என்று கண்களில் சோகமாய் பரிதாபமாய் கேட்டான்...?

அப்பா எங்கள பிரிந்து வேறநாட்டுல வேலைப்பார்க்கிறாங்க 6மாதங்களுக்கு ஒருமுறை தவறாமல் வந்து செல்லுவார் அண்ணன் பிரண்டோட அக்கா திருமணத்திற்கு போயிருக்கான் என்று சொன்னாள்........இப்போதுதான் இவன் மன நிம்மதி அடைந்தான்.அங்கிருந்து சந்தோஷமாய் கிளம்பி ஊருக்கு பயணமானான் அரவிந்த்..........!

எழுதியவர் : ப்ரியா (17-Dec-14, 11:48 am)
பார்வை : 242

மேலே