காற்றில் மிதக்கும் இறகு -தேடல் 13-புவனா சக்தி

குளிர்ந்த காற்றை சுவாசித்து
தனது சுதந்திரத்தை நிலைநாட்ட
பறந்து திரிந்தது ஒரு இறகு.

தனது கனவு உலகத்தை
தேடி பறந்த இறகு காற்றின்
அழுத்த குறைவால் கீழே விழுந்தது .

நிமிர்ந்து பார்த்த இறகு
தன்னை சுற்றி இருந்த நாய்களை
பார்த்து பயத்தில் நடுங்கியது.

என்ன செய்வது என்று புரியாமல்
மீண்டும் பறக்க முயற்சித்து
பறக்க முடியாமல் கிழே விழுந்தது.

தனது பிஞ்சு கைகளால்
கை கூப்பி கதறியது இறகு .

காமத்தில் தன்னிலை மறந்த நாய்கள்.
தன் தாயும் தங்கையும்
ஒரு பெண் தான் என்று மறந்தது.

இறகின் கீக் குரலும்
அழுகையும் ஒலித்தது நான்கு திசைகளிலும் .

யார் செவிகளிலும் எட்டவில்லை
போலும் அந்த அழுகை .

கண் இமைக்கும் நேரத்தில்
கந்தலாகிய இறகு
உதிரம் உதிர்ந்த நிலையில்
நடு ரோட்டில் கிடந்தது .

பிரிந்து சென்ற தன் இறகை
தேடி வந்த தாய் இறகு

பேனா பிடித்து எழுதும் பிஞ்சு
விரல்கள் மறுத்து போய்.
நிர்வாண நிலையில் பாதி பிணமாய்
இருந்த இறகை பார்த்த
தாய் இறகின் உதிரம் கொதித்தது .

மீண்டும் பறக்க ஆசை பட்டு
நீதி தேவதையின் முன்
நின்றது இறகு .

பணம் மட்டும் தான் பேசியது
நீதி தேவதையின் முன் .

எந்த சாட்சிகளும் இல்லை
என்று நாய்களை விடுதலை
செய்தால் நீதியே இல்லாமல்
அந்த நீதி தேவதை .

கந்தலாகிய இறகு மனமும் ஒடிந்து
சிறகும் ஒடிந்து பறக்க முடியாமல்
அழுது மடிந்தது .

இறகின் கல்லறையில்
பூக்களாய் உதிர்ந்தது
தாயின் கண்ணீர் துளிகள் .

இறகின் கல்லறையிலும் மொய்த்தது
நாய்கள் வேறு ஒரு சிறகுடன்.


((இத்தகைய நல்லதொரு வாய்ப்பையும் கொடுத்த தோழர் திரு.குமரேசன் அவர்களுக்கு என் நன்றிகள் பல))

எழுதியவர் : புவனா சக்தி (18-Dec-14, 1:05 am)
பார்வை : 242

மேலே