இதயவாசல் ரத்தினங்கள்
இதயவாசல் 'ரத்தினங்கள்'
-----
பல்லவி
எத்தனை எத்தனையோ ரத்தினங்கள்!
நித்தம் நிதமும் அழும் சித்திரங்கள்!
அன்பு கொண்டது ஒரு பாவமா - தந்த
பாசத்திற்கு வந்ததொரு சாபமா? - என (எத்தனை எத்தனையோ..
அனுபல்லவி
அன்பை விதைத்து நாளும் பார்த்து வளர்த்தும்
நொந்து இருக்க வைத்த சொந்தங்கள் தப்போ - என (எத்தனை எத்..
தொகையறா (ஒப்பாரி வகை)
ஆலாய் செழித்திருந்து... அழகழகாய் விழுதுவிட்டு...
நாலாய் தழைக்கும்போது... அடிமரத்தை ஒதுக்கி விட்டார்...
ஆணிவேர் அங்கிருக்க... பிடிப்பு இங்கே கிடைக்கவில்லை...
தாங்கியார் பிடித்தாலும்... சந்தேகம் தருது தொல்லை...
(அன்பை விதைத்து... தொடர்ந்து...
(எத்தனை எத்தனையோ...
சரணம் 1
காடு வயல் வீடு வாசல் கண்ணை மறைக்க,
காலம் போகும் நேரத்திலே பிள்ளைகள் தள்ள -
இல்லங்களெல்லாம் இங்கு இல்லையென்றானால்
சொல்லம்பு தைத்த இந்த வாழ்க்கை எதற்கு - என (எத்தனை எத்...
சரணம் 2
அன்பு உலகம் இங்கு ஆயுளை கூட்டும்
இன்பமழையில் என்றும் நெஞ்சம் இனிக்கும்
இந்த மண்ணிலே இது சொர்க்கம் நமக்கு
இங்குவந்தது கொஞ்சம் புண்ணியம் சேர்த்து - என (எத்தனை எத்..
________________________________________
இதயவாசல் முதியோர் இல்லத்திற்கு ஒரு ஆவணப்படம் எடுக்க ஆயத்தம் செய்கிறோம். இயக்கம், படப்பிடிப்பு, இசை எல்லாம் தயாராகி வருகிறது. பின்னணிக்கு ஒரு பாடல் எழுதியிருக்கிறேன் (முதல் முயற்சி)
- Dr.C.R.Suriyakumar