என் வலிகளில் சில-சகி

@@வலிகள் @@
என் கண்களில் தினம்
மிதக்கும் கண்ணீர்த்துளிகள் ...
என் கண்ணீர்த்துளிகளை
ரசிக்கும் என் அறை கண்ணாடி ...
வலிகளுடன் என் விழிகளே
ஆறுதல் தரும் என் விழிகளின் பிம்பங்கள்....
நான்கு சுவருக்குள்
என் அழுகுரல்....
கதறி அழும் என் இதயத்தின்
வலிகளை உணர்வாயா....
விலகி நிற்கிறாய் ...
ஆறுதல் இல்லாத
அனாதையாக நான் ....