துணை
கசக்கும் ..
கைக்கு எட்டியதைக் கூட
தெரிந்தே தவற விடும் ..
கனவுகளைக் கடன் வாங்காமல்
கடன் பட்டேனும் ..
கண்ணியம் தவற விடாது..
நெஞ்சம் நிமிர்த்தும் ..
அஞ்சுதல் இல்லாது
அமைதியுடன் உறக்கம் தரும் ..
நேர்மை!
அதை கைபிடிக்க ..
என்றும் கைவிடாது!