நாட்டுக்கு அவன் அன்பு கிடைத்தாலே போதும்

என்ன செய்வேன் உனக்கென !

வர்ணங்களாய் உன்
வாழ்வை மிளிரச் செய்வேனா ?

வசதியாய் உன்னை என்
அன்பில் வளரச் செய்வேனா ?

கோடையில் குடை போல
உன்னை காத்து நிற்பேனா ?

காயங்களுக்கு மருந்தாய்
உன்னை ஆற்றிச் செல்வேனா ?

குளிரில் நடுங்கும் போது
கம்பளியாய் உன்னை போர்த்தி இருப்பேனா ?

வியர்வை வழியும் போது
உன்னை துடைத்து கொள்வேனா?

என் பசி மறைத்து
உன் பசி நிரப்புவேனா ?

கண்ணீர் கசிய
மண்ணாய் அதை தாங்கிப் பிடிப்பேனா ?

இத்தனையும் உனக்கு செய்தாலும்
நான் உணரா என் தந்தையின்
அன்பை நீயும் உணர முடியாது என்று எப்படி சொல்வேன்

மண்ணில் நீ பிறந்து -உன்
தந்தையை அழைக்கும் போது -

என் வார்த்தைகள் மட்டும்
மெளனமாக -என்னவன்
நாட்டுக்காக உயிர் விட்ட
நாளிதழ் செய்தி மட்டும் உன்னுடனும் என்னுடனும் .....

அடுத்த தலைமுறையும்
தந்தை அன்பு கிடைக்கா விட்டாலும்
நாட்டுக்கு அவன் அன்பு கிடைக்கட்டும் .......

எழுதியவர் : கீர்த்தனா (19-Dec-14, 8:29 pm)
பார்வை : 95

மேலே