அந்த நாள் ஞாபகம்

அம்மா இடை மேல்
குடம் வைத்து நடக்க.

பிடிவாதமாய் நானும்
கேட்டு வாங்கி இடுக்க.

அதைப் பார்த்து
அம்மா ரசிக்க.

நான் அம்மா கரம்
பற்றி நடக்க.

காலணி இல்லாத
என் பாதம்.

ஒற்றைப் பாதையிலே
அட்டை போல் கோலம்
பதித்து வர அதை அம்மா
நோட்டம் மிட்டார்.

காட்டின் ஓரம்
உள்ள பாதையாலே
நீர் எடுக்க நாங்க
போகையிலே.

கேட்டது குயில் ஓசை
ஒலித்தது குரங்கின்
குரல் ஒலியும்.

சில்லுறும் இசைக்க
அதை நான் செவி
மடுத்தவண்ணம்
அம்மாவிடம் கேட்க.

அம்மா அதை பாட்டாக
அதன் பெயர்களை
என்னிடம் உரைக்க
நான் கேட்டுக் கொண்டே
அசைந்து அசைந்து நடக்க.

தினமும் நீர் எடுக்க
வரும் போது இத்தனை
ஒலிகளைக் கேட்க
வேண்டுமா என்று
அம்மாவிடம் நான்
வினாவ ஆமான்டா
கண்ணே என்று அம்மா
என் கண்ணம் தட்டிச்
சிரிக்க.

நான் செல்லம்
பொழிந்த வண்ணம்
அம்மா கரம் பற்றிய
படியே நடக்க.

குளக்கட்டை அடைய
அம்மா கரத்தை விட்டு
நான் குதிக்க.

அம்மா கவணம்
கவணம் என்று
கூச்சலிட கூடி
இருந்த அனைவரும்
அம்மாவைப் பார்க்க
அம்மா கொஞ்சம்
வெட்கப்பட நான்
நின்று சிரித்தேன்.

திடிரன அம்மா
என்று குரல்
கேட்கவே நான்
சுய நினைவுக்கு
வந்தேன்

என்னைப்
போல் என் மகளும்
ஏதோ கேட்க
அழைத்திருக்காள்
சிந்தனையைக்
கலைத்தாள்
என் கரம் பற்றி
வந்த சின்ன மகள்.

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (19-Dec-14, 8:05 pm)
பார்வை : 208

மேலே