மரணப்பொறாமை

(தன் வயதை ஒத்தகப்பல்காரன் மரணமடைய அவன் இறுதிச்சடங்கில் நடக்கும்
சிறப்பை அவன் சிறப்பையும் பார்த்து பொறாமை அடைந்து தன் நிலையை நினைத்து ஏங்குதல்)

வான்முட்ட வெடிவெடிச்சி
போராண்டா மாகராச
ஊர்முழுக்க பூதூவி
போராண்டா மாகராச

நரை மீச சவ்வாதில்
குறையா உடம்புதெரியாமல்
சவ்வாது மனம் தூக்க
தெருவெல்லாம் முகம்பார்க்க

கால்கட்டு போட்டுக்கிட்டு
கப்பல்காரன் என்னும் பெருமையோடு
தேர்வண்டிப்பூட்டிக்கிட்டு
தெம்மாப்போராண்டா

அனுப்பிவைக்க நூருபேரு
அடக்கம்செய்ய நூருபேரு
போய் வரன்னு சொல்லாமல்
போய்விடவே நூரு பேரு

போராண்டா மாகராசா
போராண்டா

கஞ்சி வருமுன்னு
காத்து கிடக்காமல்
நாய்சட்டி மோந்து
கொழம்யென்ன பார்க்காமல்

பேய் வரும் திண்ணையின்னு
பேசுரமாடத்தில் போய் உறங்காமல்
அப்பனா வாழ்க்கை வலிக்காமல்
போராண்டா மாகராச

வெள்ள தலைக்காரன்னு
விறட்டல் கேட்காம(ல்)
சும்மாயிருன்னு
சொல்லு உடையாம(ல்)

பட்டானி பகவடா
பக்குவமா கடிக்கவே
பல்லுமுடையாம
பலமும் உடையாம(ல்)


மகன்வீடு துரத்தி
மகள்வீடு பிடிச்சி
நிச்சலா அடிச்சி
வாங்கி குடிச்சின்னு
கதையெல்லாம் கேட்காமல்

போராண்டா மகராசா
போராண்டா

கோழி வளர்த்து
கோ'' கூவவைத்து
ஆடுவளர்த்து
ஆ ன்னு கத்தவைச்சி

ஏய்யின்னு கேட்காமல்
எடுத்தெரியப்படாமல்
ஏப்பம் குறையாமல்
ஏக்கம் வளராமல்

தாடி தழைக்கவே
தலைக்கு எண்ணை கிடக்கவே
தடியைப் பிடிக்காமல்
மொவனால் ஒதுக்காமல்

போராண்டா மகராசா
போராண்டா

அப்பான்னு மகன் அழ
அய்யான்னு மறுமகள் அழ
அய்யோ மகள் அழ
அத்தனை பேரப்பிள்ளையும்
கண்ணிரில் கரையகரைய


கொம்பனா போறாண்டா
கொட வள்ளலா போறாண்டா
இம்மமா போறவனுக்கு
சொர்க்கமென்ன சொர்க்கம்
இன்னும் பலகாலம்
இந்த மண்ணுல் இவ பெரு நிக்கும்

(அமைதியாய் இருந்துவிட்டு அதே வயதுடயை இவர் ஏங்குதல்)

அந்த கப்பரனுக்கு
கடவுள் கொடுத்தவரம்
இந்த கமனாட்டி மொவனுக்கு
கடவுள் கொடுக்கலையே?

எழுதியவர் : தே.ராகுல்ராஜன் (19-Dec-14, 9:44 pm)
பார்வை : 88

மேலே