வைரங்களும் கூழாங்கற்களும்
நோயுடன் வரும்
நோயாளியிடம் கனிவோடு பேசும்
மருத்துவர் சிலரும்
இலங்கை வேந்தனாய்
வங்கிக்கு வரும் மனிதரிடம்
நட்பு காட்டும் நல்லதிகாரியும்
கடமையில் கண்ணியமாய் செயல்படும்
கட்டுப்பாடுள்ள காவலரும்
அன்பும் அருளும் கருணையுடன்
அள்ளி வழங்கும் ஆன்மீக தோன்றலும்
மனிதரில் மாணிக்க கற்கள் அன்றோ?
கைகூப்பி இவர்களை வணங்குதல் தவறில்லை அன்றோ?
இவையன்றி கொண்ட பதவியில்
கர்வம் தனை அமர்த்தி
கத்தும் நபர்களை
காலமும்தான் மாற்றோதோ ?