காதல் தாசி அவள்

காசு பணம் பறித்து கொண்டு
காதல் செய்தாய் என்னை நீ
கத்தி பேச முடியல
கதறி அழுவவும் முடியல..

காவல் நிலையம் போனால் அங்கே
கண்ட படி பேசி என்னை
காரி துப்பிய காக்கி சட்டைகள்
கண்ணீரோடு வெளியே வந்தேன்..

காசு பணத்தை பரி கொடுத்து
பாசத்தையும் கொட்டி கொடுத்து
பரிதாபமாய் நான் இன்று
பரதேசியாய் பார்போருக்கு..

பழித்து பேசி என்னை
பரிதவிக்க விட்டு விட்டு
பரவசமாய் நீயும்.
பதட்டம் இல்லாமல் இருக்கிறாயே?

காதல் என்ற பெயரில் நீ
காசு பணம் சாம்பரிக்கும்
காதல் தாசி நீதானா?
அந்த கருமகாறியும் நீதானா?

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (20-Dec-14, 12:16 pm)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 71

மேலே