அவளை நினைக்கிறேன்
சிதறும் விண்மீன்களாய்
சிறுநகை கொண்ட
அவள் நினைவு எனக்கு வேண்டாம்...
வண்டின் கண்படா
வண்ணமலர் இதழ் கொண்ட
அவள் நினைவு எனக்கு வேண்டாம்...
சாயும் செங்கதிர்
தூவும் மிளிர்துகளாய் முகங்கொண்ட
அவள் நினைவு எனக்கு வேண்டாம்...
மின்னும் இலைநுனி நீர்த்துளியாக
இதழோர நகை கொண்ட
அவள் நினைவு எனக்கு வேண்டாம்...
ஒளிரும் வான்நிலா
ஒளிந்த இரவென சிகைகொண்ட
அவள் நினைவு எனக்கு வேண்டாம்...
அழகு மயிலின் இலகு
தோகையென மேனி கொண்ட
அவள் நினைவு எனக்கு வேண்டாம்...
மறக்க நினைக்கும்
என்னை துடிக்க வைக்கும்
அவள் நினைவு எனக்கு வேண்டாம்...
மறக்க நினைக்கிறேன் , உறுதியாக ....
மறக்கவே
"அவளை நினைக்கிறேன்"....