வாதம் செய்து மனிதனை வதம் செய்யாதீர்

ஓரடி உலகை படைக்க
சீரடி வைத்தாய் போற்றி !
பாரடி உலகம் உய்ய
பலரிங்கு அவதாரமெடுத்தார் !!

யாரடி பெரிதென்று இம்மண்ணில்
மல்லுக்கு நிற்கும் மனித குலம்
மனிதத்தை புறம்தள்ளி
மனித மாமிசத்தை ருசி பார்க்குதடி !!

காலடி பிறந்த ஆதி சங்கரன்
மனிதம் தழைக்க மகத்தான வழி சொன்னான்
மண்ணில் நீ பிறக்க இருக்கும்வரை
மன்றாடும் மாத பிதா முன்தெய்வம் !!

புத்தனும் போதித்தான்
தமிழ் சித்தனும் போதித்தான்
ஆசையை துற அகந்தையை ஒழி
அதிசயம் இதுவரை நிகழவில்லை !!

ஏசுவும் நபியும் இம்மண்ணில்
அன்பு வழியில் அறிவுரை சொல்ல
வன்மம் குறையவில்லை வளருது தினமும் !!
கிருஷ்ணன் ஏசு நபிகள் இணைந்தாலும்
இவர்கள் இணைந்திட மாட்டார்கள் !!

போதனை என்னும் போதையில்
வளருது தீவிர எண்ணம்
வன்முறை கொண்டு பிறர் சுதந்திரம் பறித்து
இவர்கள் சுதந்திர போராளியென பறைசாற்ற
எல்லா தெய்வமும் வெட்கி தலைகுனியிது காணீர் !

பிஞ்சையும் விடுவதில்லை
நெஞ்சம் பதைக்கவில்லை
உணவாய் நஞ்சா உண்கின்றாய் ?
கஞ்சா அடித்து மனம் மறுத்ததோ !!

எழுதியவர் : கனகரத்தினம் (20-Dec-14, 10:46 pm)
பார்வை : 165

மேலே