காற்றில் மிதக்கும் இறகு தேடல் 14 --மீள் பதிப்பு
காற்றில் மிதக்கும் இறகு தேடல் 14
(மீள் பதிப்பு )
விடுதலை வேண்டி புறப்பட்ட
இறகொன்று காற்றின் கையில்
அகப்பட்டது அக்கணமே
அகதியாய் பெயர் பெற்றது
வானின் திசை எல்லாம்
வட்டமிட்ட சிறகு இன்று
காற்றின் கைப்பிடிக்குள்
கைதாகி போனது
காற்று என்பது அசையும் வளி
காலம் என்பது அசைக்கும் உளி
அதன் ஒவொரு அசைவிலும்
உள்ளங்கள் செதுக்கப்படுகிறது
ஏதிலியாய் ஒர்வாழ்வு
ஏற்பட்ட பின்பு உன் இனத்தில்
யாரும் உரிமையாய்
குரல் கொடுப்பாரா என்று
ஏக்கம் கொண்டு தூக்கம்
தொலைக்காதே -விடுதலை
என்பது பிறர் கொடுப்பதல்ல
நீ போகுமிடம் சுடுநெருப்போ
புயல் வீசும் ஒரு இருப்போ
கடக்க முடியாத அலைகடலோ
மன்னர் சூடும் மணிமுடியோ
எங்கு போனாலும் அடிமை
விலங்கு உடைத்தாய்
அதற்காக முயன்றாய்
என்பது உண்மை
சொந்தமாய் வாழ்க்கை வேண்டி
சுவாசத்தில் விடுதலை வேண்டி
அடிமையாய் வாழாது
அகதியாய் வாழும்
எம் நிலைமையும் உன் நிலையே
இன்னும் அலைகிறோம்
இறக்குகளாய் காற்றில்
****
நன்றி நன்றி
மயில்களின் இறகுகளோடு
இந்த காக்கையின் இறகு இணைந்ததில்
மகிழ்ச்சி நன்றி நண்பர்களே