சொல்லவில்லை என்னிடம்

முத்தமிட்டு வழியணுப்பி
கையசைக்கும் தருணம்
சொல்லவில்லை என்னிடம்
உன் கனவுகளில் நான் கனவு கண்ட நாட்கள்
உண்மை ஐ
சொல்லவில்லை என்னிடம்
சுட்டித்தனமும் குறும்புத் தனமும்
சுத்தி வந்த போதும்
சொல்லவில்லை என்னிடம்
இல்லறத்தின் இன்பமாய் நீ ஆன போதும்
உன் புன்முறுவலில் புது வாழ்க்கை நான் கண்ட போதும்
வருங்காலம் வலமாக திட்டமிட்ட போதும்
கல்விக் கனியை நீ சுவைக்க நான்
கஷ்டப் பட்ட போதும்
சொல்லவில்ல என்னிடம் - இறைவன்
சொல்லவில்லை என்னிடம்
கல்வி அறை அல்ல இது
கல்லறை யாய் மாறும் என
சிறார்களின் சிறகுகள் கிழிக்கப்படும் என
உயிர்கள் பிரிக்கப்படும் என
ஏன் சொல்லவில்லை என்னிடம் ??!!!