என்னைப் படித்தால் உன்னைப் படிக்கும் உலகம்

(நண்பர் குமரேசன் கிருஷ்ணனின் படைப்பில் எழுந்த ஆர்வம் மிகுதியில் அமைத்த படைப்பு )
எது நிசம் ?
எது நிழல் ?
கேள்வியும் நீயே
பதிலும் நீயே
வேண்டாம் வீண் சந்தேகம் .....!

பூமிக்குள் புதைப்பதால்
விதைகள் மடியுமா?
பூமி எப்போதும்
புதைகொள்ளாது
விதைகளும் அப்படியே
நீ சீண்டும் வரை ....!

விதைத்தவன் வினை
விதைத்தவன் பாடு
வேர்களுக்கும் சுடும் வித்தை
தெரிந்தால் நீ தாங்க மாட்டாய்...?

கடிகார முட்களுக்குள்
காலங்கள் அடங்குமா? என்றால்
நமக்கு எச்சரிக்கின்றன
காலம் பொன்னானது என்று
உடைத்தால் கடிகார முள் உடையலாம்
நீ சேர்த்த முட்கள்(வலிகள்) உடையாது
காலங்களும் அப்படியே..!

கடல் நீரின் சீற்றத்தை
கரை எப்படித் தடுக்கும்?
கடல் நீர் அமைதியானது
அதன் மேல் கொண்ட காதலால்
அலைகளும் அமைதியே ...
சீண்டிப் பார்த்தால் எதில்
முடியும் என்பதே நாம் அறிந்த உண்மை
புரிந்திருக்கும் சுனாமி யென்று...!

கதிரவன் ஒளியைக்
கைகள் மறைத்தால்? ஏது உலகம் ?
கதிரவனை காண முடியுமா?
வெகு நேரம் உன்னால்..?
எப்படி அதனை கரங்கள் கொண்டு அணைக்க முடியும்
எப்படி நம்மால் மறைக்கவும் முடியும்
பரம் பொருள் போன்றவன் அவன் ....!

..............................................தொடர்வோம் அடுத்த பகுதியில்

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (22-Dec-14, 12:11 am)
பார்வை : 271

மேலே