காதல் -சகி

@@அன்பே@@

தென்றலின் தீண்டலில்
மெதுவாய் தன் இதழ்களை
விரிக்கும் மலரின்
சுவாசக்காதல் ....

கொஞ்சிடும் காதல்
பறவைகளின் கிசுகிசு
காதல் சத்தம்.....

மேகம் அது தூது
விடும் மழையின்
காதல் சாரலாய் மண்ணில்....

இமைகளின் தீண்டலில்
விழிகள் மூடும் காதலின்
மென்மை தீண்டல்கள்....

வித்தியாசமான காதல்
இவை ஒவ்வொன்றிலுமே ...

இதை போலவே நம்
காதலும் வித்தியாசமான
விசித்திரமான காதல் என்பதை
நாம் மட்டுமே உணர்வோம்....

நம் ஊடலில் மட்டுமே
நம்மை நாம் அறிந்துக்கொள்ளும்
காதல் என்றுமே நமக்கு
மட்டுமே சொந்தமே....

எழுதியவர் : சகிமுதல்பூ (22-Dec-14, 5:02 pm)
பார்வை : 86

மேலே