ஒன்றினில் இருந்து
பிஞ்சுக் குழந்தை
நெஞ்சம் தொலைத்தோம் ..
கருணை நெஞ்சம்
காற்றினில் விட்டோம் ..
காற்று மனதை
கனமாக்கிக் கொண்டோம் ..
கனம் தலையில்
ஏற்றி வைத்தோம் ..
ஏறிய விஷத்தை
கக்கி வளர்ந்தோம் ..
கக்கிய வார்த்தைகள்
கவனிக்க மறந்தோம் ..
கவனம் குறைந்திட
களிப்பற்றுப் போகிறோம் !