மலர்களின் மரணம்

மலர்களின் மரணங்களை
யாராவது பார்த்ததுண்ட
இல்லை விரும்புவதுண்ட

இங்கே பாருங்கள்
மலர்களின் மரணத்தை...

கொத்து கொத்தாய்
கிடப்பதைப் பாருங்கள்...

சேர்த்து வைத்த கனவுகளின்
சிதறல்களைப் பாருங்கள் ...

சிரிக்கும் பூக்கள்
சிதையாய் இருப்பதைப் பாருங்கள் ...

குழந்தையும் தெய்வமும் ஒன்று
இங்கே பல தெய்வங்கள் இறந்து
கிடப்பதைப் பாருங்கள்.....

மீண்டும் வேண்டாம் இப்படி
ஒரு மலர்களின் மரணம்
போதும் நிறுத்திக் கொள்ளுங்கள் ......

இந்த இரத்தத்துளிகளை
பார்த்து கூடவா
உங்களுக்கு கண்ணீர் துளிகள் வரவில்லை

இடுகாட்டில் இருக்கும் பிதாமகன்
அழகூடதாம்... மரபாம் ..
இத்தனை மலர்களைப் புதைத்தவன்
மரபையும் மீறி அழுதுவிட்டனாம்....

அவன் மனிதத்திலாவது
கொஞ்சம் கடன் வாங்கிக் கொள்ளுங்கள்
இந்த மலர்களைக் கொன்றவர்களே !

எழுதியவர் : kannama (23-Dec-14, 2:06 pm)
Tanglish : malarkalin maranam
பார்வை : 174

மேலே