எழுதாத பொருள்

எழுதாத பொருளெல் லாம்
எழுத வேண்டு மென
எண்ணம் எனதாக -நான்
எழுதியது தான் என்ன

கண் இமை படபடப்பில்
கட்  டுண்ட சிறையில்
கற் கண்டு இனிப்பில்
கனி ரசம் சொட்ட

இமை மூடா விரைப்பில்
இது தாண்டா காதல்
இதை விட்டால் வேறு
இளைப் பாறல் ஏது

மூழ்கி மூழ்கி மீண்டும்
மூழ் காமலும் நனைந்து
முத் தெடுத்து முழுதும்
மூச் சிறைத்த பின்னும்

தத் தளிக்கும் தளிர்கள்
தனி மயக்கம் தீர
எத் துணைதான் எழுத
இம் மயக்கம் விலக

("விலகாது" - நண்பர்கள mind voice கேக்குது)

எழுதியவர் : முரளி (23-Dec-14, 3:23 pm)
Tanglish : eluthatha porul
பார்வை : 106

மேலே