பதட்ட படுகிறேன் நான்
கண்களில் உன்னை வைத்து
கவிதைகளில் சொல்லை வைத்து
கற்பனையில் உன்னை வாழ வைத்து
கனவுகளை நெஞ்சில் வைத்து.
எனக்கு நீ வாக்கப்பட்டு வர வேண்டும்
என ஆசை பட்டு அழகாய்
உன்னிடம் சொல்லிவிட்டு
தாலி வாங்கி விட்டு.
வருவதாக சொல்லி விட்டு
உன்னை மட்டும் விட்டு விட்டு
வந்தேன் நான் அதற்குள் எங்கே
சென்றாய் அந்த இடத்தை விட்டு..
ஆசை பட்ட என்னை மட்டம்
தட்டி விட்டு எங்கே பறந்து
விட்டாய் பட்டமாய் நீ..
பதட்டமாய் இருக்கிறேன் நான்..
.