நீ தான் தேவதை

கலைமேகங்கள் சிலையாகியே வந்தாடியவள் இவளா!!
கருஞ்சோலைகள் அலைகுழல்களாய் நிலைமாறுமே இவளாள்!!!
வெள்ளைகுளத்திலே ஒருகருநிலா கொள்ளை கண்ணாய் ஆகுதே!!!
இல்லையா உள்ளாதா
என மனத் தொல்லை
மெல்ல இடைத் தந்ததே!!!
கிள்ளை உன்செவ்விதழில் செந்தமிழுடன்
கள்ளும் தேனும் வழியுதே!!
தில்லைஅம்பலத்தில் அடாநடனம் உன் நட அசைவில் பரதம் ஆகுதே!!!

எழுதியவர் : சூர்யா (24-Dec-14, 2:28 pm)
பார்வை : 291

மேலே