கே பாலச்சந்தர்
#Kபாலச்சந்தர்
என்பதும் இன்று
உண்மையானதே !!
கைலாசம் பாலச்சந்தர் !!
மரணத் திரைப்படம் இயக்கச் சென்றான் !!
கால்ஷீட் தந்தவன் காலச்சந்தர் !!
மீளாச்சந்தராய் நம்
பாலச்சந்தர் !!
திரைக்குபின்னால்
திரிந்தவர்களுகெல்லாம்
திசையெங்கும் பறக்க
சிறகுகள் தந்தவன் !!
உணர்வுகளை செதுக்கும்
உண்மைகள் சொன்னாய் !!
உள்ளத்தின் உருவை
ஊரறியச் செய்தாய் !!
உன் #கையளவுமனசில்
வானளவுக் கற்பனைகள் !!
#புன்னகைமன்னா புதைந்தேன் போனாய் !!!!
#தண்ணீர்_தண்ணீர் !! கண்களில் !!
உயிருடன் வாழ்ந்த
உன்னதத் திரைப்படம்
சுபம் காண்கிறது !!
இன்றே இப்படம் கடைசி !!
ஆன்மா அமைதியுறட்டும் !!
பாப்பாரப்பட்டி நாகராஜன்
டிசம் 23 2014