கே பாலச்சந்தர்

சினிமா துறைக்கு....

புது புது அர்த்தங்கள் தந்து-இன்று
சினிமாவின் அகராதியில் நீ!

ராகத்தில் ஒரு ரணத்தை சொன்னாய்
சிந்து பைரவியில்

பார்தாலே பரவசப்பட்டாய்-இன்று
எமன்தான் அவசரப்பட்டான்

வறுமைக்கும் நிறம் கொடுத்தான்(ய்)
எருமையில் வந்து நின்றான் அவன்(எமன்)

வானமே எல்லை தந்தாய்-இன்று
வானுக்கே சென்று விட்டாய்

வானில் நட்சத்திரமாய்-நீ
உன் நிழலாய் சினிமாவில்
ரஜினி,கமல் எனும் இரு நட்சத்திரங்களாய்....

நீ தந்தாய் தண்ணீர் தண்ணீர்-இன்று
எங்கள் கண்களில் கண்ணீர் கண்ணீர்

ஆன்மா அமைதியுறட்டும் !!

எழுதியவர் : தமிழ்செல்வன் (24-Dec-14, 3:50 pm)
பார்வை : 125

மேலே