நதியே -தேவி மகேஸ்வரன்

இரு கரைக்குள்
அடங்காமல் வழிந்தோடும்
இளமையாய்
கட்டவிழ்த்து ஜல்ஜல்லென
கவிபாடி ஓடும்
நதியே!
ஆண்டுகள் பல ஆனபோதும்
அப்போது தான் பூத்த
குமரி போல் சிரிப்போடு
துள்ளி ஓடுவதென்ன!
சில நேரம் உனைப்பார்த்து
சிலையாய் சமைந்திருக்கிறேன்.
பல நேரம் உனைப்பார்த்து
பரவசத்தில் திளைத்திருக்கிறேன்.
முடி நரைத்து
நடை தளர்ந்தபோதும்
மாறாதடி!
அட காதல் நதியே
உன் மீதான என் காதல் !