குடியை மறந்து விடு

மதுவுக்குள் நீ மயங்கி
மங்கையை மறந்தே நீ
மானகெட்டு வாழாதே..

குடியை மறந்து விடு
குடும்பத்தை பார்த்து விடு
குழந்தைகள் நலம் பெற..

வாழ்க்கை வலம் பெற
வாரிசுகள் உயர் பெற
வருங்காலம் நிலை பெற..

இன்றே மறந்து விடு
இனிமையாய் வாழ்ந்து விடு
இல்லறம் நலம் பெற..

குடித்து மடிந்து நீ
குற்றம் பல பெற்று
குறையாய் வாழாதே.

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (25-Dec-14, 12:45 pm)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 66

மேலே