என்றோ நிறைப்பது

அவள்
பத்து விரல்களும்
முத்து பதித்திட்ட
ரத்தினங்கள் !

என்
முத்தம் ! அதனது
மொத்த அழகுக்கும்
ஒத்தனங்கள் !

அந்தச்
சிட்டுக் குயிலவள்
பட்டுக் குரலது
மெட்டுகளே !

அதன்
கொட்டும் இனிமைகள்
பட்டு விரியுங்கள்
மொட்டுகளே !

அவள்
பாதச் சிலம்பொலி
காதில் விழுந்துடக்
காதல்வரும்

பின்பு
காதல் உணர்விகள்
மாதவள் கண்ணுக்குத்
தூதுவிடும் !

அந்த
நீலக் கடலிசை
காலைக் குயிலொலி
ஓலமென்றேன்

எழிற்
சோலை வனமலர்
ஜாலக் குரலொலி
கோலமென்றேன் !

இங்கு
பாதத்தையும் குரல்
கீதத்தையும் பற்றி
வரைந்துவிட்டேன் !

என்றன்
காதல் கவியிது
ராதை யவள் மனம்
நிறைப்பதென்றோ ?

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (25-Dec-14, 5:13 pm)
பார்வை : 127

மேலே