தென்றலை பிடித்து வைக்கவா பெண்ணே - இராஜ்குமார்

தென்றலை பிடித்து வைக்கவா பெண்ணே
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

முல்லை மலரின்
இதழோடு மோதி
தொலைந்ததடி - உந்தன்
தேகம் தேடிய தென்றல் ..!

--நாளை சன்னல் திரை அசைந்தால் சொல் கண்ணே
--தெருவில் நின்றாவது பிடித்து வைக்கிறேன் ..!
----தென்றலை ..!

பறக்கும் விசித்திர
பார்வையை மேகம் மறைக்க
ஒளிந்ததடி - உந்தன்
விழிகளை விரும்பிய பதுமை ..!

--மதியம் வானம் விலகினால் சொல் பெண்ணே
--மேகத்தை மிரட்டியாவது அழைத்து வருகிறேன் ..!
----பதுமையை ..!

பஞ்சவர்ண கிளியின்
சிறகு சாரலில் நனைய
அழிந்ததடி - உந்தன்
இமைக்கு ஏங்கிய வர்ணம் ..!

--மாலையில் பறவையை பார்த்தால் சொல் அன்பே
--மழையில் நனைந்தாவது எடுத்து வைக்கிறேன்
----வர்ணத்தை ..!

நீரலையில் நீந்தும்
ஒளியினை சிறுபுல் உரச
கலைந்ததடி - உந்தன்
நெற்றிக்கு கிறங்கிய விண்மீன் ..!

--இரவில் நிலவு மிதந்தால் சொல் அழகே
--இருளை வெளுத்தாவது விடுதலை செய்கிறேன் ...!
----விண்மீனை ..!


- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (25-Dec-14, 5:49 pm)
பார்வை : 182

மேலே