மனிதகுலத்தின் மாட்சிமை - தாய்மை

மனக்கண் கொண்டு
கணப் பொழுதில் -
மழலை கணமரியும்
மண்ணுலகின் தெய்வம்..!

விதையாகு முன்னை
வியாதிக ளண்டாமல் -
உயிரோ டுனைகாத்து,
உலகென்று சுற்றியவள்..!

தன்னையே தாரைவார்க்கும்
தானியங்கி பூமிகூட -
தாயவளின் கண்ணீரால்
தாகத்தை போக்குமடி ...!

கண்காணா கடவுளவன்
கரையேறி வந்தாலும் -
தானுறங்கிப் போவானே;
தாய்மையவள் தாலாட்டில்..!

பிறந்தாலும் இறந்தாலும்
பிள்ளையவள் முன்செல்ல -
வரம்கேட்டு வாடுகின்றேன்
தருவாயோ என்னிறைவா ...!!

- வாழும் தெய்வத்திற்கு என் அன்புக் காணிக்கை -

எழுதியவர் : ஜாக் .ஜி .ஜெ (26-Dec-14, 9:25 am)
பார்வை : 457

மேலே