ஊனமுள்ளவனின் கண்ணீர் - உதயா

கவுடள்
என்னை
காலில்லாமல்
படைத்திருந்தாலும்
வாழ்கை தன்னம்பிக்கை
என்ற இரு கரங்களோ
சேர்த்து
நாங்கு கரங்களை
படைத்தான்
எனக்கு
ஊனமென்பது
மனதில் இல்லை
ஆகவே எனக்கு
ஊனமே இல்லை
சாதிக்க நினைத்தேன்
சாதித்தேன்
வெற்றிகளையும்
பரிசுகளையும்
அலங்கரித்தேன்
மானிடா கடவுள்
உன்னை நல்ல
மெய்யோடு
படைத்திருக்கரான்
இருப்பினும்
நீயோ ஊனத்தை
மனதில் வளர்த்துக்கொண்டு
சோம்பேரியாக இருக்கிறாய்
நீ
எப்படிவேனுமானாலும்யிரு
என்னை ஏனடா
ஏனளம் செய்கிறாய்
பேருந்தில்
செல்ல
பேருந்து நிலையத்தில்
நின்றால்
என்னை கண்டு
நிற்காமலே செல்கிறது
பேருந்து
சாலையில்
நடந்து செல்லும்போது
என் முதுவுக்கு பின்னாடி
புது புது
பெயரோ முனுமுனுகிறார்கள்
என் கண்ணிரோ
கத்தியாக பாய்ந்தது
உன் கழுத்தை அறுக்க
இருப்பினும் என்
கை தடுத்து கொண்டது
உன்னையும்
என் உடன்பிறவா
உறவாக நினைத்து
கடவுள்
படைப்பில்
அனைவரும்
ஊனமற்றவர்கள் தான்
நீங்கள் தானடா
எங்களை
ஊனம் ஊனம்
என்று சொல்லி
ஊனமுடைவனாக
மாற்றிகொண்டே
இருக்கீற்கள்
எங்களுக்கு உதவ வேண்டாம்
ஏளனம் செய்யாமல் இருந்தால் போதும்
உங்கள் அனுதாபம் வேண்டாம்
ஒரு வாய்ப்பு கொடுத்தால் போதும்
நாங்கள் வாழ்கைக்கு
புது அர்த்தம் கொடுப்போம்