என் இனிய காலை

என் கைபேசியின் புல்லாஹ்குழல் அலாரம்
தூக்கம் கலைத்து எழுப்பும்

நான் சோம்பல் முறிக்கும் அழகைப பார்த்து
விடிவெள்ளி கண் சிமிட்டி மறையும் .....!

என் வீட்டு குளியலறை ஷவரில் முதல்நாள்
இரவு சேர்த்துவைத்த பனித்துளிகள்
பூந்தூரலாய் தூவும்.....!

நான் தலை துவட்ட ஆதவன் ஆயிரம் கைகளை நீட்டி
ஆவலோடு வருவான்

என் கூந்தலுக்குள் காலைத் தென்றலும் வந்து
கண்ணாமூச்சி ஆடும் ....!

நான் சேலை உடுத்தும் அழகை
வீட்டு கண்ணாடி ஒற்றை கண்ணில் ரசிக்கும் .....!

என் அலங்காரத்தை தவமிருந்து பார்க்கும்
என் முகத்தில் தன் அழகைப் பார்க்கும் ...!

நான் தத்தி ஓடும் அழகைப் பார்க்க
வாயில்படிகள் தவமிருந்து கிடக்கும்...!

என்னைக் காண ஒற்றைப் புறா ஒன்று
பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் ....!

நான் செல்லும் கல்லூரிப் பேருந்தில்
நானே இளவரசியாய்...!

என் ஓட்டுனரே பேருந்தின் (தேரின்)
சாரதியாய்... !

என் கல்லூரியின் இருமருங்கிலும் நிற்கும்
மரங்கள் என்னை கைகோர்த்து
எப்பொழுதும் வரவேற்கும்....!

எழுதியவர் : kannama (26-Dec-14, 12:27 pm)
Tanglish : en iniya kaalai
பார்வை : 83

மேலே