வளர்ச்சி

நம்
ஆசையின் உருவம்தான்
அழகுக் குழந்தை..
அது
ஆசையில்லாமல்தான் பிறக்கும்,
பின்
ஓசையில்லாமல் பிறக்கும் ஆசை..
சின்னதாய்,
ஆம்-
தாயைத் தேடுகிறது முதலில்
தன் பசி தீர..
பசி தீர்ந்ததும்
படிப்படியாய் வளர்கிறது
பல ஆசைகளும் குழந்தையிடம்..
மனிதனாக வளர்ந்ததும்
முடிந்துவிடுகிறது உடலின் வளர்ச்சி,
முடிவதேயில்லை
அவன்
ஆசையின் வளர்ச்சி மட்டும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (26-Dec-14, 5:00 pm)
Tanglish : valarchi
பார்வை : 68

மேலே