சம்மதம் கூறி விடு பைங்கிளியே
உன் காதோரம்
ஆடும் சிமிக்கி
என்னை மெல்ல
மெல்லக் கொல்லுதடி....
சின்னச் சின்ன
ஒலி எழுப்பும்
கொலுசும்
கொஞ்சம்
கொஞ்சமாக
என்னை வதைக்குதடி......
என் அஞ்சு விரலும்
உன் அணைக்க
ரொம்ப நாளாய்
கெஞ்சுதடி......
உன் ஒற்றைக் கல்
மூக்குத்தியும் ஒளி
கொடுத்தே என் விழியைக்
கொள்ளை அடிக்குதடி.....
என் கரம்தான்
உமக்கு நெற்றித்
திலகம் விட
வேண்டும் என்று
உன் நெற்றிச் சுட்டியும்
அடம் பிடிப்பது போல்
தோணுதடி.......
உன் வண்டுக்
கண்ணும் உருண்டு
உருண்டு கதை கதையாக
சொல்லுதடி காவியமாக
என்னை அள்ளுதடி......
உன் கொவ்வைப்பழ
இதழில் நான்
கொடுக்க வேண்டும்
முக்கனியூம் கலந்த
சுவை போல் ஒரு இச்சி
என்று என் ஆசை
மனதில் துள்ளுதடி.....
என் அரும்பு மீசையால்
பச்சை குத்த வேண்டும்
மிளகு போல் மச்சமாய்
உன் பப்பாளிக் கண்ணத்தில்
என்று மீசையும் துடிக்குதடி......
உன் வெண்டக்காய்
விரலும் என்
கெண்டைக்கால்
அமுக்குவது போல்
கனவும் தோனுதடி.....
உன் இஞ்சி இடுப்பை
நான் கிள்ள வரும்
போது வழுக்கு மரம்
போல் நழுகுவாயோடி.....
இல்லை வேம்பு பிசின்
போல் ஒட்டுவாயோடி....
கஞ்சிக் களயம்
கொண்டு வந்து
வஞ்சி நீ என்னைக்
கெஞ்சி கெஞ்சி
ஊட்டுவாயோடி.....
இல்லை பச்சை
மிளகாய் போல்
முறைப்பாயோ
புளியங்காய் போல்
முகம் சுழிப்பாயோடி.....
பாசமான மச்சான்
நான் காத்திருக்கேன்
தினமும் உன்னைப்
பாத்திருக்கேன்....
பைத்தியம் ஆகும்
முன்பே சம்மதம்
கூறி விடு பைங்கிளியே.....