நான் பார்த்த நல்ல மனிதன்
ஒரு மருத்துவர் ஒரு எழுத்தாளர் ஆக
அவர் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில்
" நான் பார்த்த நல்ல மனிதன் " என்ற தலைப்பில்
நான் எழுதும் கவிதை
அன்பு அறிவு அமைதி அனைத்தும் அமைந்திட்ட
நல்ல மருத்துவராக நல்ல பண்பாளனாக
மனிதம் நிறைந்த மனிதனாக தங்களைப்
பார்ப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்
மக்களைக் காப்பதில் மருத்துவம் பார்ப்பதில்
மகத்துவம் கொண்டவர் நீங்கள்
மக்களின் மனங்களில் நம்பிக்கை வளர்ப்பதில்
நோய் அகற்றும் வல்லமையும் கொண்டவர் நீங்கள்
அதுமட்டுமல்ல புத்தகம் எழுதுவதில்
புலமையும் புதுமையும் மிக்க உங்கள்
ஒவ்வொரு வரிகளும் உண்மையே பேசும்
அகந்தை அற்ற அறிவாளி
பொறுமையின் பொக்கிஷம் நீங்கள்
தினம் தினம் திறமைகள்
படைத்திட உயர்ந்தவர் நீங்கள்
உயர்வால் உழைப்பால் உண்மையால்
தழைத்திடும் தங்களை
நலம் பலவும் நிறைந்து வாழ
நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகிறேன்
எல்லாம் வல்ல இறைவன் அருள்
என்றென்றும் உங்களுடன்
வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் சேவை