இரும்பு இயக்குநர் -சந்தோஷ்

வளைந்தும் நெளிந்தும்
நீளும் காட்சியாவும்
தொடர் கவிதையாய்..!
தாளம் தப்பாத
தட தட
மெட்டின் பிண்ணனியும்
அபூர்வ ராகமாய்..!
கதை
திரைக்கதை
இசை
என
எதை எதையோ
என் சிந்தனையரங்கில்
வேகமாய் திரையிடுகிறது.
ஜன்னலோரத்தில் நான்
மெளனமாய் பயணிக்கும்
இந்த கோவை எக்ஸ்பிரஸ் .!