காதல் பைத்தியங்களும் காமப் பைத்தியங்களும்

காமப் பைத்தியங்கள்
இடம் பொருள் ஏவலை
விலை பேசும் நிலையில்
கண்ட இடங்களில்
அரங்கேற்றும் சில்மிஷங்களை
வேடிக்கை பார்ப்பவர்
வெட்கித் தலை குனிந்து
காறி உமிழ்ந்தாலும்
ரசிகரின் பாராட்டாய்
பொருள் புரிந்து மகிழ்ந்திடுவார்..
காதல் பைத்தியங்கள்
கண்ணியம் மிக்கவர்கள்
இலமறை காயாக
இருந்திடுவார் காதலிலே
திரைத்தனக் களியாட்டம்
இவர்களிடம் இருக்காது
நிரந்தரப் பிரிவுநிலை
அச்சுறுத்தி வந்தாலும்
வன்முறைக்கு இடம்கொடார்.
மணங்காணும் வரையவரும்
நெறிவழுவா திருந்திடுவார்,
காமப் பைத்தியங்களோ
இடறும்நிலை வந்தால்
ஆள்மாற்றம் செய்யவும்
துணிந்திடுவார் கூச்சமின்றி
ஒருதலை நிலைவந்தால்
வன்முறை வாளெடுத்து
பழிவாங்க அஞ்சார்,
வன்கொடுமைச் சட்டத்தை
முறைதவறி ஏவி
இவர்செய்த துரோகத்துக்கு
ஒதுக்கியவரைத் தண்டிக்க
அரங்கேற்றும் நாடகங்கள்
பளிச்சிடும் ஊடகங்களில்
இவற்றைக் கண்ணுற்று
செவிமடுத்து கலங்கிய நாமோ
பார்த்தும் படித்தும்
என்ன உலகம் இதுவென்று
எண்ணி வருந்தி
நாணும்நிலை கொள்வோம்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பிரபல கவிதை பிரிவுகள்
சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

ஜெயில் உணவு...
தருமராசு த பெ முனுசாமி
01-Apr-2025

காற்றிற்கு ஒரு...
கே என் ராம்
01-Apr-2025
