வளர்கவி நன்மணி-2014
தோழமைகளே
வணக்கமும் வாழ்த்தும்
2015ஆம் ஆண்டின் முதல் விருதாக சிலர் "வளர்கவி நன்மணி 2014 "எனும் விருது பெறுகின்றனர்.
ஒரு படைப்பாளியின் படைப்பாளுமையை வகைப் படுத்தும் போது 3 நிலைகளை விமர்சகர்கள் குறிப்பிடுவதுண்டு....
1. வளர்ந்த படைப்பாளி -விருதுக்குரியவர்
2. வளரும் படைப்பாளி -வாழ்த்துக்குரியவர்
3. வளர்வார் எனும் நம்பிக்கைக்குரிய எனும் படைப்பாளி...
வளர்ந்த படைப்பாளி வளரும் படைப்பாளிக்கு வழிகாட்ட வேண்டும். திருத்தங்களை செய்ய வேண்டும். வளர்வார் எனும் நம்பிக்கைக்குரிய படைப்பாளிகளுக்கு பல பயிற்சிகளை அளிக்க வேண்டும். அவர்களின் வாசிப்பு தளத்தை விரிவு செய்தல் வேண்டும். 2, 3 நிலையினர் விமர்சனங்களை உள் வாங்க வேண்டும்(நையாண்டிகளையும் 'குண்டக்கமண்டக்க 'கருத்துக்களையும் ஒதுக்க வேண்டும் ')காதல் மட்டுமே வாழ்வன்று;வாழ்நில சூழலும் ஒரு பாடு பொருள்தான் என்பதை அனைவரும் உணர்தல் வேண்டும். (காதல் பாடாத புலவனே இல்லை என்பது எத்துணை உண்மையோ ,காதலை மட்டுமே பாடியவர் எண்ணிக்கையும் குறைவே என்பதும் உண்மை என அனைவரும் உணர வேண்டும்.)
சுவைஞர்கள் ஊக்குவிக்க வேண்டும்.
தளத்தில் மூவகையினரும் உள்ளனர் என்பது எழுத்து.காம் அடைந்துள்ள வெற்றி.
"வளர்கவி நன்மணி-2014 "விருது பெறுவோர்:
தோழர்கள்
யாழ்மொழி
ஜெயாராஜரத்தினம்
கயல்விழி
நிஷா ரகுமான்
ரம்யா சரஸ்வதி
1.