சீர்மிகு செயல்மறவன் -2014 விருது
தோழமைகளே
வணக்கமும் வாழ்த்தும்
2015ஆம் ஆண்டின் முதல் விருதாக இதுவரை பலருக்கும் விருதுகள் அளிக்கப் பட்டன. களத்தில் இறங்கி நேரடியாக சமுதாய மாற்றத்திற்கு என விளம்பரம் ஏதுமின்றி சேவையாற்றும் இளைஞர் ஒருவர் நம்மிடையே உண்டு. அவருக்கு "சீர்மிகு செயல்மறவன்-2014 "எனும் விருது அளிப்பதில் பெருமை அடைகிறேன்
ஒரு முறை கயத்தாறு (நெல்லை) சென்று திரும்பும் பொது மதுரையில் இவரை சந்தித்து "என்னப்பா இப்போதெல்லாம் தளத்தில் அடிக்கடி காணமுடியவில்லை. தொடர்ந்து எழுத வேண்டும் அல்லாவிடின் தூர்ந்து விடும் எழுத்தோட்டம் "என்றேன் . "இல்லை ..தோழர் நிறைய எழுதுவதற்குப் பதில் இப்போதெல்லாம் களப் பணி ஆற்றிட தொடங்கியுள்ளேன்."என்றார் .
பிறகு அவருடன் எனது தொடர்பு படர்ந்தது. சுற்றுச்சூழல் ....காணாமற் போகும் நம் பாராம்பரிய மீட்டெடுப்பு ...குழந்தைகளின் பன்முக ஆற்றலை வெளிக்கொணர்தல் ...மண் விடுதலைக்கான தொடர் கூட்டங்கள்....நாணல் அமைப்பின் மூலம் தொடர் சேவை ....என இவர் சமுதாயப் பணி படர்கிறது...தொடர்கிறது...
எனவே தோழர் தமிழ்தாசனுக்கு"சீர்மிகு செயல்மறவன் -2014 "விருது அளித்து உவகை அடைகிறேன்
வாருங்கள் "சீர்மிகு செயல்மறவன் தோழர் தமிழ்தாசனை வாழ்த்துவோம்.