என் அணையா விளக்கு நீ

என் கவிதைக்கு
சொல்லாய் வந்தாய் நீ.
என் கண்களுக்கு
காட்சியாய் வந்தாய் நீ.

என் குடிலுக்கு
விளக்காய் வந்தாய் நீ
என் உடலுக்கு
சுகமாய் வந்தாய் நீ.

என் பிள்ளைக்கு
தாயாய் வந்தாய் நீ
நீ என் வாழ்க்கைக்கு
ஒளியாய் வந்தாய் நீ.

என் முடிவு வரை
முற்றுபுள்ளியும் நீ
முடிந்த பிறகு
என் அணையா விளக்கும் நீ.

.

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (28-Dec-14, 2:33 pm)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 133

மேலே