நானா கிறுக்கன்

அனைவராலும் கைவிடப்பட்டேன்
பேருந்து நிலையத்தில் பசியோ வாட்டுகிரது
பத்து ருபாய் கேட்ட என்ணை கிருக்கன் என்றனர்
யாரடா கிறுக்கன் நானா
குடி குடியை கெடுக்கும் தெரிந்தும்
அதிக விலை கொடுத்து வங்கி குடிகிரையே
நானா கிறுக்கன்
மித வேகம் மிக நன்று
எழுதிய பலகையை கூட படிக்க முடியாமல் பறக்கிறாய் மண்ணில்
நானா கிறுக்கன்
புகை பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும்
படித்துபார்த்த பின்பும் பரவசமாய் இழுகிறாய்
நானா கிறுக்கன்
குழந்தை தொழிலாளர்களை ஒழிப்போம்
சுவரொட்டி ஒட்டுகிறான் 10 வயது சிறுவன்
நானா கிறுக்கன்
மாற்றன் தோட்டத்து பூவை பறிப்பதே தவறு
அந்த பிஞ்சு மொட்டை கசக்கி எறிகிறாயே
நானா கிறுக்கன்
அன்னை மடி மறந்து
அயலவநிடம் அடிமை பட்டாய்
நானா கிருக்கன்
கல்வியை வியாபாரம் ஆக்குவதே தவறு
கலலுரியை கட்டும் அளவிர்கு பனம் கொடுக்கிராய்
முதல் வகுப்பிற்கு
நானா கிருக்கன்
பெண்கள் அழகுதான் அதிலும்
தமிழ் பெண்கள் பிறவியிலே அழகுதான்
அது தெரியாமல் கண்டதை பூச
கையில் உள்ள அனைத்தையும் கரைக்கிராயே
நானா கிருக்கன்
உடல் அளவி்ல் சுதந்திரம் பெற்று
மனதளவி்ல் இன்னும் அடிமை பட்டு கிடக்கிராயே
நானா கிருக்கன்
செல்லுங்கள் தோழர் தோழிகழே
நானா கிருக்கன்

எழுதியவர் : Sri (28-Dec-14, 2:31 pm)
சேர்த்தது : ஸ்ரீ கணேஷ்
Tanglish : NANA kirukan
பார்வை : 123

மேலே