இலக்கணமும் நண்பனும்

இரட்டைகிளவி -
பிரித்தால் பொருள் தராது !
உன் வீட்டுக்கிழவி -
சிரித்தால் பல் தெரியாது !!

ஈறுக்கெட்ட எதிர்மறை -
பெயரெச்சம் !
உன் ஈறுக்கெட்ட பற்களோ -
பெரிய அச்சம் !!

அன்று ஊறுகாய் -
கம்பன் வினைச்சொல்லுக்கு எடுத்துக்கொண்டது !
இன்று ஊறுகாய் -
நண்பன் பனைகள்ளுக்கு தொட்டுக்கொண்டது !!

செந்தமிழுக்கு அழகு
இலக்கணம் எனும் சொல் !
இக்கவிதைக்கு அழகு
நண்பன் எனும் சொல் !!

எழுதியவர் : ரீவா (14-Apr-11, 1:51 am)
சேர்த்தது : Reeva
பார்வை : 531

மேலே