விட்டில் பூச்சிகளின் வினாக்கள்

பட்டாம் பூச்சி இறகுகள் என்
பார்வையில் தேவதை உதடுகள்.....!!
பேசும்போது அசைவுகள் நினைவை
பேதலிக்க வைக்கும் கவிதைகள்...!
அழகை ரசித்து கவிஞனானேன்
அவளை நினைத்து கரையலானேன்..!!
அறிவைக் கொடுத்த இறைவனே - ஆசை
அளவை குறைத்துக் கொடுத்திருந்தால் என்ன ?!
தணலும் குளிர தகிக்கும் காதல்
தள்ளவே நினைத்தும் தடுக்கிடும் உள்ளம்
தரணியில் உயிர்களின் நிலையும் இதுவோ ? இறைத்
தலைவனே சொல்லு நீ - காதல் இம்சை - தாங்குதல் சரியோ ?!