ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

பொங்கி வந்து இன்பம் சேர்க்கும்
ஆங்கில புத்தாண்டில் ஆற்றல்
பல பெற்று அறவே அல்லல்
அற்று மக்கள் வாழ வாழ்த்துவோம் !!
நல்லவை தீயவை அனைத்திற்கும்
விடை கொடுத்துப் புதியதை
வரவேற்போம் இப்புத்தாண்டில் ...
எல்லோர் வாழ்விலும் நன்மை தங்கிட
நம்பிக்கை வைக்கும் மக்களுக்கு
நலம் பல கிடைத்திட
வரவேற்ப்போம் புத்தாண்டை ...!
இப்புத்தாண்டில் உழைப்பே
உயர்வென உரைப்போம் உலகிற்கு ..
2014 -ன் இறுதிப் படி ஏறி
2015 -ன் வாய்ப்புகளை எட்டிப் பிடிப்போம் .
வெற்றி நிச்சயம் கிட்டும் .
என் இதயம் கனிந்த ஆங்கில
புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவருக்கும் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (28-Dec-14, 5:28 pm)
பார்வை : 961

மேலே