என்றும் மாறாத நட்பு-சகி

@@நட்பும் காதலும் @@

காதல் உறவில்
வலிகள் உறவாடும் தருணங்களில்
நட்பு என்னும் உன்னதமான
உறவு ஆதரவு தருகிறது ....

பிரிவுகளை சில
உறவுகளில் சந்திக்கும்
நிமிடங்களில் மனம்
படும் வேதனைக்கு நட்பே
மருந்தாகிறது ....

எந்த உறவிடமும்
பகிரமுடியாத வலிகளை
உண்மையான நட்பிடம் மட்டும்
மனம் பகிரும் அதுவே நட்பின்
பிறப்பிடம் ...

கடந்து வரும் பாதைகளில்
வெற்றி தோல்வி நம்மை
தேடி வரும் ....

நாம் உயரே பறந்தாலும் ...
மண்ணில் கிடந்தாலும்
கை கொடுத்து தூக்கி
விடும் நட்பு மட்டுமே ....

அன்னையுடன் பகிர இயலாத
துன்பங்களையெல்லாம் நட்பிடமே
சொல்லி ஆறுதல் தேட முடியும்....

உறவுகள் விட்டு சென்றாலும்
நட்பு என்றுமே கைவிடாது ..

முகம் அறியவில்லை என்றாலும்
முகவரி அறியவில்லை என்றாலும்
நட்பு என்ற ஓர் வார்த்தையில்
அனைத்து உறவுகளுமே அடங்கும்....

எழுதியவர் : sagimuthalpoo (29-Dec-14, 5:03 pm)
பார்வை : 239

மேலே