சென்னையில் மழை

மார்கழியில் பனியோ
மாறி பனிபோல்
பொழியும் மழையோ-இன்று
பகல் பொழுது மாலையாக
சென்னையில் மாறுகின்ற நிலையோ !!

மாறிவரும் சூழலினால்
மாறி மாரி பொழியுதோ !
குன்னுரை கண்முன் காட்டியதுபோல்
என்னூரும் குளிருதப்பா !
கொட்டிவிட்ட நீரெல்லாம்
திட்டுதிட்டாய் சாலையிலே தேங்குதப்பா!

குளம் குட்டை கால்வாய் ஆறு
குடிதனத்தின் இல்லமாக
வழிந்தோட வழியின்றி
வழிமறித்து வருத்தத்தை கொடுக்குதப்பா !

பெருநகர் வெள்ளபெருக்கில்
நாளடைவில் நாறுதப்பா !
புயல் வந்தால் மழையென்று
போட்டுவைத்த திட்டம்போல்
குடிதண்ணீர் ஆதாரமாய் மழை வந்து சேருதப்பா !

வாகனத்தில் கண்டமென்று
வந்துபோன ஆருடன் சொன்னதுபோல்
வந்த மழை வழிமொழிய
வந்து குவியுதப்பா மருத்துவமனையில்...!

ஆத்திகன் நாத்திகன் யாவருமே
ஆபத்தில் சிக்குண்டு அவஸ்த்தை பட
யார் தந்த சாபமென்று அழுது பொழம்புதப்பா!
ஆபத்தில் ஆண்டவனை நினையுதப்பா !

வழிமறித்து கட்டிய வாய்க்கள் உடைக்க
வாய்சாடல் கூட்டத்தால் முடியா போக
மழைகூடி முடிவெடுத்து வெள்ளமென கரைபுரண்டு
தரை சமன் செய்து தறிகெட்டு ஓடும் போது
தலையடித்து அழுவுதப்பா தப்பென்று உணராமலே !

நிலைகண்ட அரசியல் கூத்தாடி
காரியத்தில் கண்வைத்து பாசாங்காய்
பலவசதி செய்வதாய் சொல்லிச் சொல்லி
பலவழியில் ஓட்டுக்கு அலையுதப்பா !

பல காலம் மாறினாலும்
பல்லிளிக்கும் கூட்டம் மாறதெண்ணி
பருவ மழை மாறுதப்பா
மாறி மழை பொழியுதப்பா
மாநகரம் நாறுதப்பா !!

எழுதியவர் : கனகரத்தினம் (29-Dec-14, 6:44 pm)
பார்வை : 273

மேலே