பொம்மைக்குள் வாழ்கிறேன்

நான் அழுவதை
யாரும்
பார்கவில்லை,

என் கஷ்டத்தை
யாருக்கும்
காட்டவில்லை ,

காலை முதல்
மாலை வரை
வியர்வை மழையில்
நனைகிறேன் ,

என்னை பார்த்தல்
குழந்தைகளுக்கு
சந்தோசம் ,

அதவே எனக்கு
மிகவும் சந்தோசம் ,

வெயில் என்னை
சுடவில்லை
இருள் என்னை
நொறுக்கி தின்கிறது,

நடன வகுப்புக்கு
சென்றதில்லை
என் பொலப்பு
நடனத்தில்,

நான் அவ்வளவு அழகில்லை
ஆனால் என்
முகத்திரை அனைவரையும்
கவருகிறது ,

பசிக்கு பொழப்பு
தேடி அலைந்த
நேரத்தில் கிடைத்த வேலை இது ,

பொம்மைக்குள்
நுழைந்து கொண்டு
வாழ்கிறேன் ,

என் மகன்
இன்று பசியின்றி
உறங்குகிறான் ...

எழுதியவர் : ரிச்சர்ட் (30-Dec-14, 5:07 pm)
பார்வை : 79

மேலே