எதுவரை
பூக்களைப் பறிகொடுக்கும்
மரணத்தின் வலி
சிதையில்
கண்களின் தவம்
உறங்குதல் வரை
காணும் வரையன்று காட்சி
கனவுகளின் போதை
தெளியும் மட்டும்
வாழ்வென்பதும் வானவில்
சில நிமிடங்களின் ரசனை
மழையென துயர்
காதல் , நட்பு
தேடும் தூரங்களின் நீட்டிப்பு
நிற்கவேண்டியது
காலத்தின் மறுதலிப்பு