மோனை

உயிரே! உயிரே!
உருகாதே!
உனக்கே உனக்காய்!
உந்தன் உயிர்!!...

உன் உகந்தார்
உறவை
உடைத்தாரோ?
உன் உக்கிரம்
உனை உண்டுவிட்டதோ?


உன்னையும்
உலகத்தாரோடு
உருப்படியாய் சேர்த்திடவா?...



உன் உதிரம்
உடல்விட்டு உதிராதே!
உன் உயர்வு
உற்றார் உள்ளத்தில் நிறையட்டுமே!..
உன் உத்திகள்
உத்தரவாகும் நாள் வருமே!
உப்பிட்டவரை உள்ளளவும் மறவாதே!
உன் உயிர்த்துடிப்பும்
உரக்க சொல்லும் தமிழச்சி(ன்) என்று...
உன் உதடு உதவிக்கு உரக்க வேண்டும்...
உன் உடலும் உரமாக வேண்டும் தமிழுக்கு...
உலகுக்கு உயிர் அச்சத்திலும்
உன் உயிர் மொழியில் உரைத்திடு...
உன் உரிமை !
உருமலில்..உருவத்தில் அல்ல!
உண்ண உணவு
உடுக்க உடை
உலவ உறைவிடம்
உண்டாகவேண்டும்
உனக்கு...உன் உழைப்பால்.!..

உன் உரிமை
உன் கல்வி யாராலும்
உடைக்க முடியாது...

உயிர் தானமும்
உண்டு
உன் வாழ்க்கையில்
உண்டென்று இல்லாதவருக்கு
உதவினால்...

உயிர் தானே இங்கே!
உடல் தானே எங்கே?

உன்னை உயர்த்தி !
உறவினர் உரையாற்றினால்!...
உன்னை பெற்றெடுத்தவர்கள்
உன் உச்சிதனை முகர்வார்கள்....




~பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (2-Jan-15, 5:57 pm)
Tanglish : monai
பார்வை : 150

மேலே