சர்க்கரைக் கதை 1

சக்திக்கு விதையாகி கொஞ்சம்
முற்றினாலும் வினையாகி
உயிர்பறிக்கும் உயிர்ப்பொருளே
உனதுகதை எழுதப் போறேன்...

ஆறுபங்கு கார்பனும். அதின்
இருமடங்கு ஹைட்ரஜனும்
பிணையப்போக... கார்பனோடே
நானிருப்பெனென கலந்துவிடும்
ஆக்சிஜனும்... .மொத்தமாய் முடிச்சிட்ட
மூலக்கூறே குளுக்கோசு.... இதை
சர்க்கரையென சமூகம் சொல்லும்....

அவனின்றி ஓரணுவும் அசையாததை
அறிவியலில் உட்புகுத்தி ஆராய்ந்தால்
இங்கு அவனென்பது இவனாகும்
ஆக.. ஆதாரமும் இவனேயாகும்...

அளவென்று வந்துவிட்டால் கண்டிப்பு
அத்துமீறிச் சென்றாலே தண்டிப்பு
இன்னல்கள் முடக்கிவிட இயற்கையோடு
இயக்குநீராய் இருக்கிறதே இன்சுலினும்...

சர்க்கரையின் சிதைத்தொடர் வழிப்பாதை
சாறு நொதி உடைத்திருக்கும் உயிர்ப் பாதை..
கிளைகாலிசிஸ் என்றுரைப்பார் உயர்மேதை...

குளுக்கோசு நொதிகலந்து உடைபட்டு
பைருவேட்டும் லாக்டேட்டுமாய் பரவியோட
பருகிவிட்ட பாகமெல்லாம் பாடிடுமே
பசிநிறைந்த தெம்போடு ஆனந்தமாய்...

இப்படியாக இயல்பாக நடந்திருக்கும்
இமை இதழ் இரைப்பையென சுகந்திருக்கும்...

எழுதியவர் : நல்லை.சரவணா (3-Jan-15, 9:09 pm)
பார்வை : 225

மேலே